ஜோர்டான் நாட்டு இந்திய தூதரகம் சார்பாக நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம்!

Update: 2021-06-19 12:35 GMT

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது உலகில் உள்ள அனைவரின் கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக நாம் இருக்கும் பூமியை நாம் சேதப்படுத்தாமல் இருந்தாலே அவற்றுக்கு செய்யும் பெரிய நன்மையாகவே கருதப்படுகிறது. குறிப்பாக உங்களால் முடிந்த சில உதவிகளை செய்வதன் மூலமாக சுற்றுச்சூழலை நீங்கள் மீட்டெடுக்க முடியும். அதாவது உங்களால் முடிந்த அளவிற்கு மரக்கன்றுகளை என்பதன் மூலமாக சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம். 


அந்த வகையில் தற்பொழுது, தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் இந்திய தூதரக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, இந்திய தூதர் அன்வர் ஹலிம் தலைமை வகித்தார். அவர் தூதரக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். இந்த நிகழ்ச்சியில் தூதரக ஊழியர்கள் பங்கேற்றனர். 


இந்த இகழ்ச்சியும் கலந்து கொண்ட இந்திய தூதர் அன்வர் ஹலிம் அவர்கள் கூறுகையில், "சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூலம் அது நம்முடைய ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் அருகில் ஏதாவது ஒரு மரத்தையாவது வளருங்கள். அது உங்களின் ஆரோக்கியத்தை மென்மேலும் மேம்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News