தமிழகத்திற்கு மொஸாம்பிக் தமிழ்ச் சங்கம் சார்பாக நிதி உதவி!

Update: 2021-06-20 12:47 GMT

இந்தியாவில் கொரோனா மாபெருந் தொற்று காரணமாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இருந்தாலும் தற்போது இரண்டாவது அலை தாக்கம் குறைந்து வருவதாக மேலும் மூன்றாவது அலை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது அதில் சில தொடர்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளில் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 


இந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் செய்து கொண்டுதான் வருகிறார்கள். மேலும் பல நலசங்கங்கள் மூலமாகவும், மேலும் சமுதாய நலனுக்காக நிவாரண தொகையை திரட்டி தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது, தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, மொஸாம்பிக் தமிழ்ச் சங்கம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளது. மொஸாம்பிக் தமிழ்ச்சங்கம் அவ்வப்போது சில சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. 


அந்த வகையில் இந்த ஆண்டு சங்க உறுப்பினர்களிடம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திரட்டி, அதை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளது. மேலும் இந்த நல சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் விரிவாக இந்த தொற்று நோயில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Similar News