எகிப்து நாட்டில் இந்தியா ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சி!
உலகின் பல நாடுகளில் சர்வதேச யோகா தினம் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் தோன்றிய யோகா பயிற்சிகளின் நன்மைகள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒரே எண்ணமாக இருந்து வருகிறது. அந்த வகையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இந்தியா ஹவுஸ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அஜித் குப்தே தலைமை வகித்தார். இதில் யோகா பயிற்றுநர்கள் எளிய வகையிலான யோகா பயிற்சிகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள்,எகிப்து நாட்டின் திரைத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். யோகா உடல் உடல் பலத்தை மட்டுமல்ல தான் ஒருவருடைய மன பலத்தையும் அது மென்மேலும் வலுப்படுத்துகிறது என்பது பல நாட்டு மக்களுக்கு தற்போது தெரிய வந்துள்ளது.
எகிப்தில் மக்கள் பல இந்திய மக்கள் இந்த தூதரக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான யோகாசனங்களை செய்து சர்வதேச யோகா தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக உரையாற்றினார்.