குவைத் வாழ் தமிழர்களுக்காக இந்திய சமூக சேவை அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம்!

Update: 2021-06-24 12:45 GMT

உலகமெங்கும் உள்ள வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக அங்கு உள்ள சமூக நல அமைப்புகள் பல்வேறு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து வருகின்றது இதில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவி சேர்க்கும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த வகையில் தற்பொழுது, குவைத் வாழ் தமிழர்களுக்காக மாபெரும் இலவச மருத்துவ முகாம் சூப்பர் மெட்ரோ ஸ்பெஷாலிட்டி சென்டர் மருத்துவமனையில் நடைப்பெற்றது. மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் உடல் நிலையினை பரிசோதித்தனர்.


இந்நிகழ்வில் ஏறக்குறைய 200 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்சியினை சிறப்பாக அமைத்த KIT அமைப்பின் தலைவர் S.I. ஷேக் ரஜாக், செயலாளர் நொஷாத், பொருலாளர் முபாரக் கீவா மற்றும் இந்நிகழ்வின் ஸ்பான்ஸர்கள் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினை வழிநடத்திய கிஸ்கோ அமைப்பின் தலைவர் ஷேக் இஸ்மாயில், செயலாளர் வெல்டன் முகமது கவுஸ், பொருலாளர் ஹபிபுல்லாஹ், மருத்துவ அணி செயலாளர் ஸ்டிபன் ரோசாரியோ. துணைச்செயலர் நிஸ்ஸான் ஹலீம். KIT மற்றும் கிஸ்கோ அமைப்பின் நிர்வாகிகள் ஆதரவோடு நடைப்பெற்றது.


இதில் சூப்பர் மெட்ரோ ஸ்பெஷாலிட்டி சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக தமிழ் மருத்துவர் வருகை தந்து மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு கருத்தை சிறப்பாக பேசினார்கள். இந்நிகழ்விற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கிய சூப்பர் மெட்ரோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பைசல் மற்றும் செவிலியர்கள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நிர்வாகிகள் நன்றியினை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் முழுவதுமாக குவைத் வாழ் தமிழர்கள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

Similar News