ஆஸ்திரேலியா : இந்திய தூதரகம் சார்பில், அதிகமான இந்தியர்கள் கலந்துகொண்ட யோகாசன நிகழ்ச்சி!
முதன்முறையாக இந்தியாவில் இருந்து தோன்றிய யோகா தற்போது உலகின் பல நாடுகளில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பின்பற்றும் ஒரு சாதாரண தினசரி உடற்பயிற்சியாக மாறிவிட்டது.2015ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் தன்னுடையஅன்றாட நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதிலும் குறிப்பாக அன்றாட பழக்க வழக்கங்களை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை.
அந்த விதத்தில், தற்பொழுது ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் 7ஆவது சர்வதேச யோகா தினத்தில், இந்திய தூதரகம் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வெஸ்டன் கம்யூனிட்டி ஹப்-ல் நடைபெற்ற இந்த நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும் இந்தியர்களும் பங்கேற்றனர். யோகா ஆஸ்திரேலியா என்ற யோகா நிறுவனத்தைச் சேர்ந்த யோகா நிபுணர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி, பங்கேற்றவர்களும் அவற்றைச் செய்யச் செய்தனர்.இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பப்பட்டது.
இதில் குறிப்பாக அதிகமான இந்தியர்கள் இடம் பெற்றனர் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் அனைத்து மக்களும் தங்களுடைய நாட்டின் சார்பாக நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் பல்வேறு வகைகளை செய்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் நேரடியாகவும் மற்றும் உலகில் உள்ள அனைவரும் எந்த இடத்தில் இருந்தும் பார்க்கக்கூடிய வகையில் ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.