துபாயில் தற்போது கோடை காலம் அதற்கான பல்வேறு போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. மேலும் இப்போட்டியில் கலந்து கொள்பவரின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகத்தான் உள்ளது. ஏனெனில் வீட்டிற்குள் இவ்வளவு நாள் அடைபட்டு கிடந்த மக்கள் தற்போது நடைபெறும் போட்டிகளில் அதுவும் திறந்த வெளியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்பொழுது துபாய் மைதான் பகுதியில் கோடை ஓட்டப்போட்டி நடந்தது. இந்த ஓட்டப் போட்டி 10 கி.மீ, 5 கி.மீ, 3 கிமீ மற்றும் 1 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இதில் 10 கிலோ மீட்டர் பிரிவில் நாகர்கோவில் இளைஞர் செய்யது அலி முதலிடம் பெற்றார். இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஓட்டப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று வரும் செய்யது அலிக்குமுக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஏற்கனவே இவர் பல்வேறு ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் பங்கேற்ற மாரத்தான் போட்டி அனைவரும் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் தற்போது துபாயில் நடைபெறும் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திரும்பி திறமையை நிரூபிக்கும் வகையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.