அபுதாபியில் இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சி!

Update: 2021-06-29 12:40 GMT

உலகமெங்கும் பரவியுள்ள இந்தியாவில் தோன்றிய யோகா தற்பொழுது அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது. அந்த வகையில் பல்வேறு நாடுகளில் சர்வதேச யோகா தினம் முன்னிட்டு, பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, மக்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல நாடுகளில் இந்திய தூதரகம் சார்பாக யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. 


தற்பொழுது அபுதாபியில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார். அமீரக மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யோகா பயிற்றுநர்கள் எளிய வகை யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தனர். மேலும் இந்திய தூதரகம் சார்பில் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அரங்கேறியது. 


இந்த நிகழ்ச்சியில் அல் அய்ன் இந்திய சோஷியல் செண்டரின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முபாரக் அல் நஹ்யான் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஒன்றாக யோகா இருந்து வருகிறது மேலும் அனைத்து மக்களும் யோகா செய்வதன் மூலமாக பல்வேறு நன்மைகளை பெறமுடியும் என்றும், உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என்றும்" அவர் கூறியிருந்தார்.

Similar News