பாலஸ்தீன மக்களுக்கு இந்திய அரசின் சார்பில் மருத்துவ உதவிகள்!

Update: 2021-07-06 12:45 GMT

உலகத்தில் முழுமையாக தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. இதனால் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளின் நிலைமை படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி அத்தகைய நாடுகளில் மிகவும் கடுமையான சூழலில் இருந்து வருகின்றது இதர நாடுகளுக்கு இந்தியா பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தக்க சமயத்தில் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. 


குறிப்பாக இந்த நோய் தொற்று காலத்தில் மிகவும் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. நாடுகளுக்கு அவ்வப்போது உதவிகளை வழங்கி வருகின்றது. பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் வகையில் இந்திய அரசு அத்தியாவசிய மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. இந்த மருத்துவ உதவிகளை பாலஸ்தீன நாட்டுக்கான இந்திய அரசின் பிரதிநிதி முகுல் ஆர்யா அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மை கைலெயை சந்தித்து வழங்கினார். 


அதனை பெற்றுக் கொண்ட மந்திரி இந்திய அரசின் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தகுந்த இந்தியாவின் உதவி செய்யும் மனப்பான்மை மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாலஸ்தீனம் நாட்டைச்சேர்ந்த சுகாதாரத்துறை மந்திரி கருத்து தெரிவித்தார். நட்பு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா ஒருபொழுதும் பின்வாங்காது என்பதை இந்த செயல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. 

Similar News