மலேசியா: கொரோனாவின் பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் தற்கொலை கலாச்சாரம்!

Update: 2021-07-07 12:38 GMT

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மக்கள் இந்த பெருந்தொற்று பல்வேறு வகையான துன்பங்களை எதிர்கொண்டு எதிர் கொண்டுள்ளார்கள். அவற்றில் குறிப்பாக மன உளைச்சல் காரணமாக பல்வேறு பணப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, தற்கொலை வரை சென்று உள்ளார்கள் என்று ஒரு சர்வே முடிவு கூறுகிறது. இது உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் தற்போது மலேசியாவில் இந்தக் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் போது பல நபர்கள் தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார்கள் என்று கூறுகிறது. 


கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார சரிவு மற்றும் வேலையின்மையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மலேசியாவில் சமீப மாதங்களில் கொரோனாவினால் ஏற்பட்ட மன நெருக்கடி காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மலேசிய தன்னார்வ அமைப்பு வெளியிட்ட தகவல்படி, "கொரோனா ஏற்பட்ட இழப்புகள் மட்டுமல்லாது மலேசியாவில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.


கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 468 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மலேசியாவில் 609 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 63 பேர் தற்கொலை செய்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைகள் அதிகரித்து வருவதால் மக்களின் மன நலத்தைக் காக்க சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் தன்னார்வ அமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 



Similar News