தமிழகம் திரும்பும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு தொழில் துவங்க கடன்!

Update: 2021-07-09 12:51 GMT

பல்வேறு தமிழர்கள் தங்கள் வெளிநாட்டில் செய்து வந்த வேலைகள் தங்களுக்கு திருப்தி தராத நிலையில், தங்களுடைய தாயகத்திற்கு மீண்டும் திரும்பி ஒரு சுய தொழில் துவங்க நினைக்கிறார்கள். எனவே அத்தகைய வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தொழில் துவங்க கடனை தமிழக அரசு தர வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் தாயகம் திரும்பினால் தொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டுமென துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் சமீபத்தில் தமிழகத்தின் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இணையம் மூலம் நடைபெற்ற சந்திப்பில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடனுதவி மற்றும் இன்சூரன்ஸ் திட்டம், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைத்தல், போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இமான் நிர்வாகிகள் தலைவர். PSM ஹபிபுல்லா மற்றும் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோர் வைத்திருந்தனர்.


ஏற்கனவே பல்வேறு சமூக நல அமைப்புகளும் அளித்துவந்த கோரிக்கைகளை ஏற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "வெளிநாடு வாழ் தமிழர் தாயகம் திரும்பினால் தொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி வழங்கவும் மற்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு ரூபாய். 5000 வழங்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக" அவர் தெரிவித்திருந்தார். 

Similar News