குவைத் : அன்னிய முதலீடு தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளின் திடீர் சந்திப்பு!

Update: 2021-07-10 13:56 GMT

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னணியில் அன்னிய செலவாணி முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அயல் நாடுகளில் முதலீடு மூலமாக ஒரு நாடு பெரும் வருவாய் அதன் வருமானத்தை இரட்டிப்பாகிறது என்று சொல்லலாம். எனவே அன்னிய முதலீடு தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி குவைத் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களின் திடீர் சந்திப்பு மூலமாக அன்னிய முதலீடு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 


குவைத்தில் விமான போக்குவரத்து துறையின் துணைச் செயலாளர் யூசுப் அல் பவுசான் உடன் இந்திய தூதரகத்தின் முதலீடுகளுக்கான அதிகாரி பகத் சூரி சந்தித்து பேசினார். அப்போது தூதரக அதிகாரிக்கு விமான போக்குவரத்து துறை அதிகாரி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக பேசப்பட்டது. ஏனெனில் தற்போது உள்ள தொற்று நோயின் காரணமாக பல நாடுகளில் முதலீடு என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.


ஆனால் இந்தியா தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் என்பது எந்தவித தடையுமின்றி நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. எனவே இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து குவைத் நாட்டின் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரி கலந்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் மூலமாக பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யும் என்று முதலீட்டிற்கான இந்திய தூதரக அதிகாரி கூறினார். 

Similar News