அமெரிக்க நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர்களுக்கு முக்கிய இடம்!

Update: 2021-07-15 12:55 GMT

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ஜோ பைடன் அவர்கள் நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு முக்கிய அதிகாரங்கள் வழங்கப்படும் வருகின்றன. அந்த வகையில் தற்போது 2 இந்திய வம்சாவளி மருத்துவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களின் நிர்வாகத்தில் கமலா ஹாரிஸ் துணை அதிபராக நியமிக்கப்பட்டதில் துவங்கி தற்பொழுது வரை அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். 


இந்நிலையில் மேற்கு விர்ஜீனியா மாகாணத்தின் முன்னாள் சுகாதார கமிஷனரான மருத்துவர் ராகுல் குப்தாவை தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனத்தில் உலக சுகாதார பணியகத்தின் உதவி நிர்வாகியாக அறுவை சிகிச்சை நிபுணரும் பிரபல நுாலாசிரியருமான அதுல் கவாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த ராகுல் குப்தா முன்னாள் இந்திய அரசு அதிகாரியின் மகன். முதலில் டெல்லியில் மருத்துவம் பயின்ற இவர் பின்பு அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தார்.


கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருக்கும் குப்தா மேற்கு விர்ஜீனியாவில் 2 கவர்னர்களின் கீழ் பணியாற்றி உள்ளார். மருத்துவர் கவாண்டே மருத்துவத்தில் மட்டுமல்லாமல் நுால்களை எழுதும் திறனையும் உடையவர். இவர் எழுதிய நான்கு நுால்கள் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் நிர்வாகத்தில் சுகாதார மற்றும் பொது சேவைகள் துறையின் மூத்த ஆலோசகராக கவாண்டே பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News