ஜோர்டான் நாட்டின் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்!

Update: 2021-07-16 13:17 GMT

இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ஜோர்டான் நாட்டில் பல சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது, பெண்களுக்கான சிறப்பு கருத்தரங்கு குறித்து இந்திய தூதரகம் சார்பில் நடத்தியது. ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மான் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் "இன்றைய சூழலில் பெண்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.


இந்தியாவின் 75 வது சுதந்திர தின ஆண்டையொட்டி இந்த சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இதற்கு இந்திய தூதர் அன்வர் ஹலிம் தலைமை வகித்தார். அப்போது அவர் பெண்களின் பங்கு இன்றைய நாட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக குறிப்பிட்டார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பெண் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். குறிப்பாக எல்லா துறைகளிலும் பெண்கள் தற்பொழுது தங்கள் வலிமையை நிலைநாட்டிக் கொண்டு வருகிறார்கள்.


மேலும் இன்றைய ஒரு சூழ்நிலையில் பெண்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு விதமான பயிற்சிகளையும் முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு தான் வருகிறார்கள். அவர்களின் அந்த உழைப்பிற்கு ஏற்றவாறு அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் குறிப்பாக பெண்கள் மிகவும் எல்லா துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.


Similar News