துபாயில் காணொளி வாயிலாக நடைப்பெற்ற ஊடகத்துறையின் சிறப்புக் கருத்தரங்கம்!
துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல்வேறு முக்கிய கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது ஊடகத்துறையும் நாமும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. தமிழால் இணைவோம் உலகத் தமிழ்க் களம் என்ற தலைப்பில் "ஊடகத்துறையும், நாமும்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை பேராசிரியை முனைவர் அல்தாஜ் பேகம் உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் ஆறுமுகம், பார்த்தசாரதி, இலங்கை அஹில் முஹம்மத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஊடகத்துறையில் தமிழுக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் என்ன, என்ன என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டன. ஊடகத்துறை மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு அங்கீகாரங்கள் ஏன் தமிழுக்கு கொடுக்கப்படுவது இல்லை என்பது போன்ற கேள்விகளும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.
கடைசியில் நிறைவுப் பகுதியாக ஊடகத்துறையில் தமிழுக்கு சிறப்பு அங்கீகாரம் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் கிடைக்கின்றது என்றும் அதை சரியாக பயன்படுத்த தெரிந்த ஊடகத்துறை நண்பர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இணங்க தமிழை எந்த இடங்களில் அதிகமாக பயன்படுத்துகிறோமோ அந்த இடங்களில் அது தனக்குரிய ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் என்பதை மறுப்பதற்கில்லை.