லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் திறப்பு!

Update: 2021-07-20 12:57 GMT

உலகின் எல்லா நாடுகளிலும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அவை தமது நாடுகளின் மரபுரிமை அடையாளங்களையும் தொல்பொருட்களையும் தமது பண்டைய நாகரிகங்களின் எச்சங்களையும் காட்சிப்படுத்துகின்றன. அந்த வகையில் தற்பொழுது வருகின்ற ஜூலை மாதம் 31-ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு விழா நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு நாட்டின் அருங்காட்சியகத்தின் மூலமாக தமது நாட்டின் தொன்மையையும் பழம் பெருமையையும் பறைசாற்றுவதோடு இளைய தலைமுறையினருக்கும் பிற நாட்டினருக்கும் தமது வாழ்வியலை எடுத்துரைக்கின்றன.


இதனடிப்படையில் தான் தமிழ் மொழி உலகின் தொன்மைவாய்ந்த மூத்த மொழியாக அறியப்படுகிறது. உலகின் பல மொழிகளுக்குத் தாயாகவும் பல நாகரிகங்களுக்குத் தோற்றுவாயாகவும் விளங்குகிறது. இம் மொழியைப் பாதுகாப்பதற்கும், இதன் தொன்மையையும், வளத்தையும், நேர்த்தியையும், அறிவியல் தன்மையையும் உலகுக்கு எடுத்துரைப்பதற்கும் இளைய தலைமுறையினருக்குத் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் தமிழ் மொழிக்கு அருங்காட்சியகம் அமைப்பது அத்தியாவசியமாகின்றது. 


எனவே லண்டனில் அமையவிருக்கும் மெய்நிகர் தமிழ் அருங்காட்சியத்தின் மூலமாக லண்டனில் வசிக்கும் அனைத்து மக்களும் தமிழில் முக்கியத்துவத்தையும் மற்றும் அதை எவ்வாறு தோன்றியது? என்பதை அவர்களால் கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக குறிப்பாக தமிழின் பயன்பாடு உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. 

Similar News