துபாயில் நடைபெற்ற தமிழரின் நூல் வெளியீட்டு விழா!

Update: 2021-07-23 12:51 GMT

தமிழில் எழுதிய நூல்கள் பல அனுபவங்களை கற்றுக் கொடுக்கிறது. குறிப்பாக தாய் மொழிகளில் எழுதுவதன் மூலமாக ஒரு எழுத்தாளரின் ஆக்கபூர்வமான அனுபவங்கள் பற்றி அந்த புத்தகங்களில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், தற்போது துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜாகிர் உசேன் அவர்கள் எழுதிய 'என் நகைச்சுவை அனுபவங்கள்' என்ற நூல் வெளியிடப் பட்டிருக்கிறது. 


துபாயில் நேற்று புனித ஹஜ் பயணத்திற்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். புனித ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் நத்தம் சொறிப்பாரைப்பட்டி ஜாகிர் உசேன் அவர்கள் எழுதிய 'என் நகைச்சுவை அனுபவங்கள்' என்ற நூலை அறிமுகம் செய்து வெளியிடப்பட்டது. 


மேலும் இந்த நூலை நிகழ்ச்சியாளர் சார்பாக லெப்பைக்குடிக்காடு ரஃபி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர்கள் சென்னை ஜமீல், திருச்சி பைசுர் ரஹ்மான், திருச்சி இக்பால் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதைப் பற்றி எழுத்தாளர் கூறுகையில், "இதில் முழுவதுமாக அவருடைய வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டது. மேலும் இதன் மூலம் படிப்பவர்களுக்கு எந்த இடங்களில் வாழ்க்கையை நகைச்சுவையாக கையாள வேண்டும் என்பது தெரியவரும்" என்றும் அவர் கூறியுள்ளார். 

Similar News