அமெரிக்காவில் டெக்சாஸின் பியர்லாண்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கோயிலில் ஜோதிகா ராஜகோபாலனின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடைபெற்றது. எனவே இதன் மூலம் அமெரிக்காவில் ஒலித்தது தமிழக கலையான பரதநாட்டியம். இந்த நிகழ்ச்சி முதலில் நடராஜ பூஜையுடன் தொடங்கியது. ஜோதிகா தனது குரு மற்றும் குடும்பத்தினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றார். அடுத்து குருவிடமிருந்து தன் பாத சலங்கைகளைப் பெற்றுக்கொண்டு அரங்கேற்றத்தை துவங்கினார்.
தன் நடனத்தை வெவ்வேறு கடவுள்கள் குறித்து 8 பகுதிகளாக அவர் நிகழ்த்தினார். அவரது முதல் பகுதி கணபதியைப் பற்றிய மிகவும் மகிழ்ச்சியான நடனம் அதைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு ஒரு சப்தம். கிருஷ்ணன் மணலை உட்கொண்டு வெண்ணெய் திருடும் போது அவரின் குறும்புத்தனத்தை இந்த பகுதி சித்தரித்தது. அவருடைய மூன்றாவது பகுதி நடராஜருக்கு வர்ணம். வர்ணங்கள் மிகவும் நுணுக்கங்கள் கொண்ட சற்றே கடினமான பகுதிகள். அடுத்து அனைவரையும் கவர்ந்தது அவர் ஆடிய முருக பகவானுக்கு ஒரு காவடிச் சிந்து.
அதைத் தொடர்ந்து மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் மகாஷகியின் வடிவத்தை அவர் சித்தரித்தார். அப்போது அவரது நாக்கு வெளியேயும் அகன்ற கண்களோடும் காண்பித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அடுத்து கிருஷ்ணா தனது புல்லாங்குழல் வாசிப்பதை சித்தரித்த இப்பகுதி வேகமான பாத அசைவுகளுடன் அமைந்திருந்தது. இறுதியாக தொடர்ந்து அய்யப்ப பகவானுக்கு மங்களத்துடன் முடித்தார். நிகழ்வு முழுவதும் அவரது ஆற்றலையும் மென்மையான நடன அசைவுகள் மற்றும் அழகான முக பாவனைகளையும் பார்வையாளர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் பேசினர். இறுதியாக இவருடைய குரு திருமதி. இந்திராணி பார்த்தசாரதி அரங்கேற்றத்தை முடித்ததற்கான சான்றிதழை வழங்கினார்.