துபாயில் நடைபெற்ற மார்க்கெட்டிங் துறை தொடர்பான விவாதம்: கலந்து கொண்ட தமிழ் மாணவர்கள்!

Update: 2021-07-28 14:22 GMT

துபாயில் மார்க்கெட்டிங் துறை தொடர்பாக கலந்தாலோசனை விவாதம் ஒன்று நடைபெற்றது. குறிப்பாகbஉணவு பொருளாதாரமும், உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வது குறித்து காணொலி வழியில் விவாதம் நடந்தது. அமீரக சுற்றுச்சூழல் குழுமம் இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். மேலும் தற்போது உள்ள பேக்கிங் தொழில்நுட்பத்தை எவ்வாறு சரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. 


இந்த விவாதத்தில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அதிகாரி யூசுப் முஹம்மது அல் மர்சூகி, உணவு பேக்கேஜிங் பேரவையின் அலுவலர் லிசா ஜிம்மர்மென், உலக பேக்கேஜிங் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜோகன்னெஸ் பெர்க்மெய்ர் உள்ளிட்ட பலர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.


அப்போது உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சிங்கப்பூரில் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் தன்னார்வத்துடன் பேப்பர், அலுமினியம் கேன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியது குறித்தும் தெரிவிக்கப்பட்டது


Tags:    

Similar News