அனைவரும் வரலாம் ! அனுமதி வழங்கிய சவுதி அரசு !
இந்தியர்கள் அதிகமாக செல்லக்கூடிய உம்ரா பயணத்திற்கு சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபிய நாட்டில் நோய்தொற்று முன்பு அதிகரித்த காரணத்தினால் வெளிநாட்டு பயணிகளின் வருகை க்கு தடை செய்து இருந்தது ஆனால் தற்போது அதில் தளர்வுகளை அனுமதித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு 18 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபிய அரசு தடை விதித்தது. தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஹஜ் பயணம் நிகழ உள்ளது. உம்ரா புனித பயணம் மெக்கா மற்றும் மதினா ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கியது. ஹஜ் பயணம் போன்று இல்லாமல் உம்ரா பயணத்தை ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். தற்போது உம்ரா புனித பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக உம்ரா புனித பயணத்திற்கு முதலில் மாதத்துக்கு 60 ஆயிரம் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த எண்ணிக்கை ஒரு மாதத்துக்கு 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி பிரஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் கூறி உள்ளது. தடுப்பூசி போட்ட நபர்கள் மட்டும் தான் இந்த பயணத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலிருந்து இத்தகைய பயணத்தை மேற் கொள்பவர்கள் அடுத்த வருடம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Input: https://www.bbc.com/news/world-middle-east-58135756
Image courtesy:BBC news