சீன அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், சீன அமைச்சருடன் உரையாடினார்.

Update: 2021-09-17 13:32 GMT

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் குறிப்பாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேசினார். இந்தியா, சீனா இடையே உறவு மேம்பட இரு நாட்டு எல்லையில் அமைதி முக்கியம் என்று சீன அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் Dr. ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கனவே எல்லை பிரச்சனைகள் காரணமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, இன்றுவரை சீனா தன்னுடைய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. எனது எந்த நேரத்தில் எதைச் செய்தும் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் சீனா இந்தியாவிடம் நடந்து கொள்கிறது. இதன் காரணமாகத்தான் உறவுகளுக்கிடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  


இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ளார். சீன அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பின்போது இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாக திரும்ப பெறுவது குறித்து விவாதித்தோம். இந்தியா, சீனா இடையேயான உறவு மேம்பட வேண்டும். எனவே அதற்காக எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இதற்காக, எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவதை விரைவுபடுத்த வேண்டியது முக்கியம் என்றும் சீன அமைச்சரிடம் வலியுறுத்திக் கூறினேன் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Input & Image courtesy:Hindustantimes



Tags:    

Similar News