அமெரிக்காவில் மோடி-கமலா, கலைக்கட்டும் இந்திய அமெரிக்க உறவு!
இந்திய பிரதமர் மற்றும் தமிழக அரசு அவர்களுக்கு இடையில் நடந்த முக்கிய பேச்சு வார்த்தையின் சிறப்பம்சம்.
அமெரிக்காவில் மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் குறிப்பாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அவருக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு நலன்கள், இந்தோ பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பயங்ரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதையும், அதை கண்காணிக்க வேண்டியது குறித்து பிரதமர் மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்தித்து பேசினார். பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது குறித்தும், அவை இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை கேட்டு கொண்டதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில் "பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்து வருவது குறித்தும், அதை கண்காணிக்க வேண்டியது குறித்து பிரதமர் மோடி அவர்கள் இடம் கூறியதை கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வருங்காலத்தில் அமெரிக்க, இந்திய உறவுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்பது இந்த நிகழ்வின் மூலம் அறியப்படும் விஷயம்.
Input & Image courtesy:Hindustantimes