அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதா?
அமெரிக்காவில் பல மாகாணங்களில் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு.;
இந்தியா பல்வேறு மக்களாலும், பலதரப்பட்ட மதங்களாலும் சூழப்பட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய நாடுகளில் ஒன்று. எனவே இந்தியாவில் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் இங்கு கொண்டாடப்படும் பண்டிகைகளின் காரணமாக பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்க்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் வாழ்கின்ற பெரும்பாலான மக்களின் பண்டிகைகள் உலக அளவில் வாழும் இந்தியா மக்களாலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்க மாகாணங்கள் ஆன டெக்சாஸ், புளோரிடா, நியூ ஜெர்சி, ஓஹியோ மற்றும் மாசசூசெட்ஸ் உட்பட பல மாகாணங்களில் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது.
இந்து மதம் அதன் தனித்துவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மூலம் அமெரிக்காவிற்கு பெரிதும் பங்களித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் அக்டோபரில் இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க நடத்தப்பட்ட கோரிக்கைகள் காரணமாக பிறகு இந்த பிரகடனங்கள் வந்து உள்ளது. அந்தந்த பிரகடனங்கள் சமீபத்தில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் செனட்டர்கள் ஆகியோரின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது. அவர்கள் இதை ஆதரிப்பதன் மூலம் அந்தந்த மாகாணங்களில் இந்தப் பிரகடனம் கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்காவில் உள்ள இந்து குழுக்கள் இப்போது அமெரிக்க அரசாங்கத்தால் முறையாக 'இந்து பாரம்பரிய மாதத்தை' பிரகடனப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன. அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடென் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள். மேலும் மில்லியன் கணக்கான இந்து அமெரிக்கர்களின் தாய்நாடான இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவை பேணுவதற்காக, அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு அங்குள்ள இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Times of India