விரைவில் துவங்க உள்ள இந்தியா- சிங்கப்பூர் இடையிலான பயணிகள் விமான சேவை !
வருகின்ற நவம்பர் 29-ந்தேதி முதல் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி பயணப் பாதை என்கிற பெயரில் சிறப்பு பயணத்திட்டத்தின் கீழ் வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை தொடங்க இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்த சிறப்பு பயணத்திட்டம் வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
இதன்மூலம் சிங்கப்பூரில் இருக்கும் NRI மக்கள் நிச்சயம் பயன் அடைவார்கள். சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் இந்த சிறப்பு பயணத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு, கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தியா, சிங்கப்பூர் இடையே இந்தத் திட்டம் அல்லாத விமானங்களையும் விமான நிறுவனங்கள் இயக்கலாம்.
ஆனால் அந்த விமானங்களில் பயணிப்பவர்கள் இருநாடுகளிலும் அமலில் உள்ள பொதுசுகாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியது மிக அவசியம். இந்த தகவல்களை சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எப்படி சூழ்நிலைகளிலும் வருகின்ற 29 தேதி முதல் அனைத்து வகையான விமான சேவைகளும் என்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:thehindu