ஓமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு !
ஓமிக்ரான் காரணமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் விதித்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உருமாற்றம் அடைந்து உள்ள ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்க, உலகம் முழுக்க புதிய பயண கட்டுப்பாடு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பரவி உள்ள தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் இதன் காரணமாக தங்கள் எல்லைப் பகுதியை மூடி உள்ளன. ஜப்பான் போன்ற நாடுகளில் மொத்தமாக வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்படவில்லை. இருப்பினும் இந்தியாவில் ஏற்கனவே கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கட்டாய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்ட விதிகள் தற்பொழுது மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் இன்று முதல் வெளி நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் இந்தியா வரும் முன் personal Detail Form ஒன்றை அளிக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்க போகும் விலாசத்தை குறிப்பிட்டும் இந்த பார்ம் அளிக்கப்பட வேண்டும். இதோடு 36 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR நெகட்டிவ் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இது அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தியா வரும் பயணிகளுக்கு இதே விதிதான் உள்ளது.
ஓமிக்ரான் இதுவரை பரவாத வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்படும். இதில் பாசிட்டிவ் என்று வருபவர்களின் கொரோனா சாம்பிள் மாதிரி சோதனை செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் படுவார்கள். மற்றபடி நெகட்டிவ் என்று வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதும் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
Input & Image courtesy: Bloomberg