நியூஸிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடும் மகாசிவராத்திரி!

Update: 2021-03-10 11:38 GMT

நியூசிலாந்து திருமுருகன் ஆலயத்தில் மார்ச் 11 ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல், மறுநாள் மார்ச் 12 அதிகாலை 6 மணி வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முல் சாம பூஜையும், 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் சாம பூஜையும் நடைபெற உள்ளது.


 நள்ளிரவு 12 முதல், மறுநாள் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் சாம பூஜையும், காலை 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் கால பூஜையும் நடைபெற உள்ளது. கோவிட் 19 இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், இரண்டாம் சாமத்தில் நடைபெறும், பக்தர்களே செய்யும் வில்வ அர்ச்சனை இந்த முறை நிறுத்தப்பட்டுள்ளது.

https://m.facebook.com/nzmurugantemple/videos/08-12-20-tuesday-pooja/413778183324550/


 அனைத்து சாம பூஜைகளும் கோயிலின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் மட்டுமே கோயிலுக்கு வருமாறு பக்தர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 100 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Similar News