வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சொத்து விற்பனையின் மூலம் செலுத்தவேண்டிய வரி!
இந்தியாவில் உள்ள சொத்தை லாபத்துடன் விற்கும் போது மூலதன வருமானம் பற்றி அறியலாம். மூலதன சொத்தை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து மூலதன வருமானம், குறுகிய அல்லது நீண்டகால மூலதன வருமானம் என இருவகையாக இருக்கலாம். நீங்கள் வசிக்கும் சொத்தை வாங்கியதிலிருந்து 2 ஆண்டுகளுக்குப் பின் (2017 ஆண்டு பட்ஜெட்டில் 3 ஆண்டுகள் 2 ஆகக் குறைக்கப்பட்டது) விற்றால் அது நீண்டகால மூலதன வருமானம். 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விற்றுவிட்டால் அது குறுகிய கால மூலதன வருமானம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் மூலதன வருமானத்திற்கும் வரி மற்றும் டி.டி.எஸ் (TDS) வெளிநாடுவாழ் இந்தியர்கள், இங்கு உள்ள சொத்தை விற்றால், அதன் மூலம் கிடைக்கும் மூலதன வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் வரிப் பிடித்தம் செய்யக்கூடிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் மொத்த வருமான அடிப்படையில், வருமான வரி விகிதப்படி குறுகிய கால மூலதன வருமானத்திற்கு 20% வரிவிதிக்கப்படும்.
முன்னோர்களின் சொத்துக்களுக்கும் வரி நீங்கள் விற்கும் சொத்து உங்கள் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டிருந்தால், அது நீண்டகால மூலதன வருமானமா அல்லது குறுகிய கால மூலதன வருமானமா எனக் கண்டறிய , உண்மையான உரிமையாளரிடம் சொத்து வாங்கிய தேதியை கணக்கில் கொள்ள வேண்டும். சொத்தின் மதிப்பையும் முந்தைய அல்லது உண்மையான உரிமையாளரிடம் வாங்கிய மதிப்பையே எடுத்துக்கொள்ளலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு எவ்வளவு TDS பிடித்தம் செய்யப்படும்? வெளிநாடுவாழ் இந்தியர் சொத்து வாங்கி 2 வருடங்களுக்குப் பிறகு விற்றால், சொத்தை வாங்குபவரிடம் 20% TDS பிடித்தம் செய்யப்படும். 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே என்றால் 30% TDS பிடிக்கப்படும்.
இந்தியாவில் வசிப்பவர் என்றால், விற்பதில் 1% பிடித்தம் செய்யப்படும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் தாங்கள் சொத்தை விற்று கிடைத்த வருமானத்தை அவர்கள் வாழும் நாட்டில் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் TDS பிடித்தம் வேண்டாம் என நினைத்தாலோ, கிடைத்த மூலதன வருமானத்தை முதலீடு செய்ய விரும்பினாலோ வருமான வரித்துறையின் TDS இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்