இந்தியர்களுக்கும், இந்தியர்களின் திறமைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது என்பதை நிருப்பிக்க இந்த ஒரு ஆய்வறிக்கை போதும். இந்திய மண்ணில் இருந்து சென்று உலகில் சுமார் 11 நாடுகளில் 58 இந்தியர்கள் மாஸ் காட்டி வருகிறார்கள். அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்படும் Indiaspora என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுகள் இந்தியர்களுக்கும் மட்டும் அல்லாமல் பல நாடுகளையும் அதிர்ச்சி அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 இந்தியர்கள் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், பிரிட்டன் உட்பட 11 நாடுகளில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பதாகவும், இவர்கள் தலைமை வகிக்கும் நிறுவனத்தில் சுமார் 36 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இந்த 58 இந்தியர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் மொத்த வருவாய் 1 டிரில்லியன் டாலர், நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலர் என Indiaspora ஆய்வறிக்கை கூறுகிறது.
சர்வதேச வர்த்தகச் சந்தையில் இந்தியர்களின் ஆதிக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது, இதை அறிந்துகொண்ட பின்பு தான் Indiaspora என்கிற அமைப்பைத் துவங்கினோம். மேலும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் தலைமை வகிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும், இந்தியாவையும், உலகையும் நல்ல வழியில் மாற்றும் முக்கியச் சக்தியாக இந்தியர்கள் இருக்கும் வேண்டும் என்று Indiaspora அமைப்பின் நிறுவனர் M.R. ரங்கசுவாமி தெரிவித்துள்ளார். Fortune 500 நிறுவன பட்டியலில் வெறும் 61 பெண் தலைவர்கள் மட்டுமே இருப்பது போல் இந்த 58 இந்தியத் தலைவர்கள் பட்டியலில் 5 பெண் தலைவர்கள் மட்டுமே உள்ளனர்.