துபாய்-சென்னை விமானம்: பயணியின் உயிரைக் காப்பாற்றியதற்காக எமிரேட்ஸ் ஹீரோக்கள்.!

Update: 2021-03-23 11:44 GMT

துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் நடுவானில் திடீரென மயக்கமடைந்த பயணியின் உயிரை காப்பாற்றிய ஹீரோக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் நரேன் பாலசுப்ரமணியம் என்ற பயணி மயக்கமடைந்து விழுந்துள்ளார். உடனடியாக, விமான ஊழியர்கள் குழு அவருக்கு மருத்துவ உதவி அளித்துள்ளது. இதையடுத்து, விமானம் சென்னைக்கு வருவதற்குள் அவர் குணமடைந்துவிட்டார்.


 இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நரேனை காப்பாற்றிய விமான ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தனக்கு உதவிய விமான ஊழியர்களின் செயலை பாராட்டி தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நரேன் சுப்ரமணியம். விமானத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமித்த எமிரேட்ஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மேலும் இதுபற்றி நரேன் கூறுகையில், "நான் என்னுடைய தந்தையின் தொற்றுக்கு பலிகொடுத்து விட்டு சோகமான மனதுடன் தான், விமானத்தில் பயணம் செய்தேன். ஆனால் வரும் வழியில் என்னுடைய தந்தை ஞாபகம் எனக்கு அதிகமாக இருந்த காரணத்தினால் என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமானது. ஆனால் விமானத்தில் இருந்த ஊழியர்களை தக்க நேரத்தில் எனக்கு உதவி செய்து, எனது உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பகிர்ந்துள்ளார்.

Similar News