துபாய் சமூக மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டபட்ட தமிழக இளைஞர்.!

Update: 2021-03-26 11:51 GMT

ராசல் கைமாவில் கொரோனா பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக இளைஞர் அஹமது சுலைமான் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற்று ஸ்மார்ட் லைஃப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவியாக மஞ்சுளா ராமகிருஷ்ணன் இருந்து வருகிறார்.


 இந்த அமைப்பு கொரோனா பாதிப்பு காலத்தில் சிறப்பான முறையில் சேவை செய்து வரும் பலரை தேர்வு செய்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்துள்ளது. ராசல் கைமாவின் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அஹமது சுலைமான் வேலை செய்து வருகிறார். இவர் கொரோனா பாதிப்பு காலத்தில் அங்கு பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய உதவுவது, அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொடுத்துள்ளார்.


 இதுபோல் அவருடன் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மொகிந்தர் ராஜு, பங்களாதேசை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் கோபிந்ரா தேப்நாத் உள்ளிட்டோருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் அவர்கள் வேலை செய்துவரும் நிறுவனத்தின் உயர் அதிகார்கள், சமூக சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News