வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வருமானத்திற்கு வரிவிலக்கு: மத்திய அமைச்சர் உறுதி!

Update: 2021-04-02 11:23 GMT

வளைகுடா நாடுகளில் குடியேறிய இந்தியர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு, இந்தியாவில் தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். திரிணாமுல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன், "சவூதி,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கட்டாரில் உள்ள இந்திய தொழிலாளர்கள் மீது நிதிச் சட்டம் 2021 புதிய அல்லது கூடுதல் வரியைக் கொண்டு வரவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.




 2021 ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் கூறப்பட்ட திருத்தம், தெளிவு படுத்துவதற்காக வருமான வரிச் சட்டத்தில் 'வரி செலுத்தும் பொறுப்பு' என்ற வார்த்தையின் பொதுவான வரையறையை இணைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த திருத்தம் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் வரிவிதிப்பை மாற்றவில்லை. வளைகுடா நாடுகளில் அவர்கள் சம்பாதிக்கும் சம்பள வருமானத்திற்கு இந்தியாவில் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.




 இதையடுத்து நிர்மலா சீதாராமனின் அலுவலகம் வெளியிட்ட ட்வீட்டில், "வார்த்தைகளுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் கட்டாரில் உள்ள கடின உழைப்பாளி இந்தியத் தொழிலாளர்கள் மீது நிதிச் சட்டம், 2021 கூடுதல் அல்லது புதிய வரியைக் கொண்டு வரவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சமூக ஊடக மேடையில் இந்த முடிவை வெளியிடுவது தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் உருவாக்குகிறது" என்று அமைச்சர் அலுவலகம் ட்வீட் செய்தது.

Similar News