பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ முகாம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் தங்கள் உடல் நலத்தை பேணுவதில் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. மேலும் நல்ல உள்ளம் படைத்த மருத்துவமனைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களை இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நவ பாரதம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை முஹர்ரக் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பல்வேறு மருத்துவ சேவைகளை இலவசமாக பெற்றனர்.
நவ பாரதம் தலைவர் பிரதீப் லட்சுமிபதி, துணை தலைவர் டாக்டர் வெங்கட், துணை பொது செயலாளர் கார்த்திகேயன், கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் அனஸ் பஷீர், துணை பொது மேலாளர் ராஜசேகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துவக்கவிழாவில் கலந்துகொண்டனர். இலவச சிறப்பு மருத்துவ முகாமானது இந்த வாரம் முழுவதும் நடைபெறும், பஹ்ரைன் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். கொரோனா நோய் தோற்று கட்டுப்பாடுகள் அரசின் அறிவுறுத்தலின்படி கடைபிடிக்கப்படுகிறது.