சர்வதேச அளவில் இணையவழி மூலம் நடைபெற்ற 'இமயம் தமிழ்மொழி விழா'!

Update: 2021-04-06 12:09 GMT

NBS சர்வதேசப் பள்ளியின் 'இமயம் தமிழ்மொழி விழா' இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி என்பது குழந்தைகளுக்குப் பாடம் மட்டும் போதிப்பதாக இருக்கக் கூடாது. மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை வெளிக்கொணர்வதே NBS சர்வதேசப் பள்ளியின் நோக்கமாகும். அதற்காகத் தான் பள்ளிகளில் பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் மிகவும் முக்கியமானது தான் 'இமயம் தமிழ்மொழி விழா' வருடா வருடம் நடக்கும் இந்த விழா இவ்வாண்டு முதன் முதலாக இணையம் வழி நடந்தது.


இதில் பட்டிமன்றம் இரண்டு பிரிவாக நடந்தன. முதல் பிரிவில் ஆறு நாடுகளைச் சார்ந்த சர்வதேச அளவில் ஸ்ரீஷா சுவாமிநாதன் (NBS சர்வதேச பள்ளி, சிங்கப்பூர்), அனன்யா அசோக் (இந்திய சர்வதேச பள்ளி, ஜப்பான்) அத்விகா சச்சிதானந்தம் (மினட்டோன்கா நடுநிலைப்பள்ளி, அமெரிக்கா) பிரித்திகா ராஜேஸ் (கெம்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளி, பிரிட்டன்) கோபிகா ராமமூர்த்தி (மகாத்மா மாண்ட்ட சேரி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, இந்தியா) மற்றும் ஷினாஷ் சுல்தான் (இந்தியப் பள்ளி, பஹ்ரைன்) ஆகிய ஆறு நாடுகளை சார்ந்த உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, "கல்வி மேம்பட பெரிதும் உதவுவது வெளிச்சூழலே? வீட்டுச் சூழலே?" என்னும் தலைப்பில் அவர்களுடைய வாதத்திறமையை வெளிக்காட்டினர். இதில் நடுவராக திருமதி.கவிதா ஜவஹர் பங்கேற்று மாணவர்களை வழிநடத்தினார். சிறப்பு விருந்தினராக திரு.மு.ஹரிகிருஷ்ணன், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் பங்கேற்றார்.


 மற்றொரு பிரிவில் ஸ்ரீநிதி ரங்க பிரசாத் பூஜாஸ்ரீ பாலமுருகன், அப்ரா முகம்மது யாசின்,விஷாலி சுப்ரமணியன், பூஜா பாலமுருகன், ரமேஷ் கனி ஆகிய சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிகளின் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் "இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது படிப்பே? பண்பாடே?" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பாக வாதாடினர். அதற்கு திரு.கண்ணன் சேஷாத்திரி அவர்கள் நடுவராக இருந்தார். இவ்விழா மாணர்வர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும்படி இனிதே நடைபெற்றது. இமயம் தமிழ் மொழி விழா சர்வதேசப்பள்ளிகளையும், சிங்கப்ப்பூர் பள்ளிகளையும் இணைக்கும் பாலமாக இருந்தது.

Similar News