சிங்கப்பூரில் நடைபெற்ற மகளிர் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்.!

Update: 2021-04-10 13:56 GMT

சிங்கப்பூர் அரசு 2021ஆம் ஆண்டை மகளிரைக் கொண்டாடும் ஆண்டாக அறிவித்துள்ளதையொட்டி, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, சிங்கப்பூரில் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக 'வானமே எல்லை' என்ற நிகழ்ச்சியை மார்ச் 28ம் தேதி இணைய வாயிலாக சிறப்பாக நடத்தியது.


நமது சமுதாய மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மனித வாழ்வியலை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்வதில் பெண்கள் பெரும் சக்தியாக திகழ்கிறார்கள் என்றால், அது மிகையாகாது. சாதிக்க துடிக்கும் பெண்கள் மனதில் மேலும் ஊக்கத்தை தூண்டும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைவதற்காக, சிங்கப்பூரின் பிரபலமான தன்முனைப்புப் பேச்சாளர் திருமதி சரோஜினி பத்மநாதன் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.


கடந்த 36 ஆண்டுகளாக சிங்கப்பூர் பொதுத்துறையில் பல்வேறு தலைமைத்துவ பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடனும், பெண்கள் மற்றும் குடும்பம் போன்ற தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நடத்திய நிபுணத்துவத்துடனும், திருமதி சரோஜினி பத்மநாதன், தன்னம்பிக்கை தான் பெண்களின் வளர்ச்சிக்கான மூலதனம் என்ற உட்கருத்துடன் பெண்கள் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News