துபாய் லாட்டரியில் 20 லட்சம் திர்ஹாம்ஸ் பரிசை வென்ற NRI!

Update: 2021-04-04 12:43 GMT

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் தங்கள் வேலை பார்க்கும் நாட்டில் கிடைக்கும் லாட்டரி சீட்டுகளை வாங்குவது ஒரு வழக்கும். இதில் தனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒருவேளை அவர்கள் பெயரும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த வகையில் தற்போது வளைகுடா நாடான ஓமானில் கேரளாவை சேர்ந்த அந்தோணி என்பவர் வேலை செய்து வருகிறார். துபாயில் நடந்த மஹ்சூஸ் லாட்டரிச் சீட்டு போட்டியில் வெற்றிபெற்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் அந்தோணி.


 மஹ்சூஸ் லாட்டரிச் சீட்டு குலுக்கல் மார்ச் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் பரிசு வெற்றியாளரின் பெயர் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசுத் தொகை 20 லட்சம் திர்ஹாம்ஸ். அந்தோணி கேரள மாநிலம் கொச்சினை தேர்ந்தவர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஓமானில் டெக்னிசியனாக வேலை செய்து வருகிறார். திடீரென இவ்வளவு பெரிய பரிசுத் தொகை கிடைத்ததை நம்பவே முடியவில்லை என அந்தோணி தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து அந்தோணி, "இவ்வளவு பெரிய தொகையை வென்றது நம்பவே முடியவில்லை. என் வாழ்நாளில் இவ்வளவு பணம் கிடைக்கும் என எண்ணியதில்லை. இந்த பணத்தை என் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பயன்படுத்த விரும்புகிறேன்.எனக்கு சில வங்கிக் கடன்கள் இருக்கின்றன. அதேபோல இந்தியாவில் சிலரிடம் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மஹ்சூஸ் லாட்டரியில் எப்படி போட்டியிடுவது என மற்றவர்களுக்கும் கற்றுத் தருவதாக அந்தோணி தெரிவித்துள்ளார்.

Similar News