துபாயில் 30 நாட்களும் அரைமாரத்தான் நிகழ்த்தி சாதனை புரிந்த தமிழக இளைஞன்!

Update: 2021-05-20 12:00 GMT

துபாயில் ரமலான் மாதத்தின் போது 30 நாட்களும் அரை மாரத்தான் ஓடி சாதனை படைத்த தமிழக இளைஞர் செய்யது அலி சாதனை படைத்துள்ளார். இவர் துபாயை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் செய்யது அலி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குற்ச்சியை சேர்ந்தவர் ஆவார்.

இவர் ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பதற்கு முன்னர் தினமும் பத்து கிலோ மீட்டர் ஓட வேண்டும் என திட்டமிட்டார். அதாவது மாரத்தானில் அதிகம் ஆர்வமுள்ள இவர் ரமலான் மாதத்திலும் தன்னால் ஓட முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.


ஆனால் தினமும் 21 கிலோ மீட்டர் ஓடி ஒவ்வொரு நாளும் அரை மாரத்தான் அளவுக்கான தூரத்தை நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் முப்பது நாளும் மொத்தம் 610 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி நிறைவு செய்துள்ளார். எந்த விதமான போட்டியும் இல்லாமல் தினமும் அரை மாரத்தான் அளவுக்கான தூரத்தை சுயமாக ஓடியிருப்பது ஒரு சாதனை நிகழ்வாகும். போட்டி இல்லாமல் தொடர்ச்சியாக 30 நாட்களும் ஓடி தன்னுடைய இலக்கை எட்டி உள்ளார் என்பதும் வரவேற்கத்தக்கது.


பொதுவாக போட்டி என்றால் தான் அதில் களத்தில் இறங்கி வேலை செய்வோம் ஆனால் போட்டியாளர்களில் இல்லாமல் தன்னால் தானே வெல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். இத்தகைய சிறப்பான சாதனையை செய்துள்ள அவருக்கு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சாதனை நிகழ்வானது முறையாக பதிவு செய்யப்பட்டு சர்வதேச சாதனை சான்றிதழை பெற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Similar News