கேரளாவைச் சேர்ந்த இந்தியருக்கு லாட்டரி மூலம் கிடைத்தது சுமார் 40 கோடி.!

Update: 2021-07-12 12:48 GMT

வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பலபேர் தங்கள் அதிர்ஷ்டத்தை பரிசோதித்துப் பார்க்கும் விதமாக லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கமாக ஒன்றாக இருந்து வருகின்றது. தற்பொழுது இருக்கும் கால் இந்த கடினமான சூழ்நிலையில் பல பேருக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு சிக்கலான சூழ்நிலையில் தான் ஆனால் அந்த வகையில் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு பணம் வீடு தேடி வருகின்றது.


இந்த வரிசையில் மீண்டும் ஒரு இந்தியர் துபாய் லாட்டரியில் சுமார் 40 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். கேரளாவை சேர்ந்த ரஞ்சித் சோமராஜன் என்பவர் அபுதாபியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார். இந்நிலையில், கடைசியாக அவரை அதிஷ்டம் தொட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த நெருக்கடியான சூழலில், லாட்டரியில் 40 கோடி ரூபாய் கிடைத்தது ரஞ்சித் சோமராஜனுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. 


லாட்டரியில் 20 மில்லியன் திர்ஹாம்ஸ் தொகை இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாயை வெற்றிபெற்றுள்ளார் ரஞ்சித் சோமராஜன். இதுகுறித்து அவர் கூறுகையில், "லாட்டரியில் முதல் பரிசை வெல்வேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு கிடைக்கும் என நம்பியிருந்தேன். 2008ஆம் ஆண்டு முதல் இங்குதான் இருக்கிறேன். துபாய் டாக்ஸியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். வேறு நிறுவனங்களிலும் வேலை செய்திருக்கிறேன். கஷ்டகாலம் என்பதால் நல்ல சம்பளம் கிடைக்குமென சில நிறுவனங்களுக்கு மாறினேன்" என்று தெரிவித்துள்ளார். 


Similar News