இந்தியா தன்னுடைய 75வது நிறைவு தினத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இந்தியாவில் அதற்கான தேசியக்குழு ஒன்றையும் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிவோம்.
சுதந்திர போராட்ட உணர்வு, தியாகிகளுக்கு புகழஞ்சலி, மற்றும் இந்தியாவை உருவாக்குவதற்கான அவர்களின் உறுதிமொழி ஆகியவற்றை உணரும் விழாவாக, சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழா இருக்க வேண்டும் என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும், நிலையான இந்தியாவின் பெருமை மற்றும் நவீன இந்தியாவின் ஜொலிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த விழா இருக்க வேண்டும் என்று அவர் தனது கருத்தை தெரியப்படுத்தினார்.
இதைப் பற்றி பஹ்ரைனில் இந்தியாவின் 75 வது ஆண்டு விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பியூஷ் சிரிவாஸ்தவ் தலைமை வகித்தார். அவர் இந்தியாவின் 75 வது ஆண்டையொட்டி நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து விவரித்தார். மேலும் இதில் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பு குறித்தும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி, நமது 75 ஆண்டுகள் சாதனையை உலகுக்கு தெரிவிப்பதாகவும் மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நமக்கு தீர்வுகளைக் கூறும் கட்டமைப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கொண்டாட்டம் இல்லாமல், எந்த உறுதி மொழியும் வெற்றிகரமாக இருக்காது என கூறினார்.
உறுதிமொழி கொண்டாட்டமாக மாறும்போது, அந்த உறுதிமொழிகளுடன், கோடிக்கணக்கானவர்களின் சக்தியும் ஒன்று சேர்கிறது. 75வது ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டம், 130 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்புதான் இந்த விழாவில் முக்கியம். இந்த பங்கேற்பில் நாட்டு மக்கள் 130 கோடி பேரின் உணர்வுகள், ஆலோசனைகள் மற்றும் கனவுகள் அடங்கியுள்ளன.