ஜோர்டான் நாட்டில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட பணிகள் தீவிரம்!

Update: 2021-07-02 13:04 GMT

அரபு நாடான ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் தற்பொழுது இந்திய நாட்டின் சார்பாக மரம் நடும் பணி தொடங்கப்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந் திர தினத்தையொட்டியும், ஜோர்டான் நாட்டின் நூற்றாண்டு விழா இரண்டையும் சேர்த்து ஒன்றாக கொண்டாடும் விதத்தில், 75 மரக்கன்றுகள் நடும் பணி இஸ்ரா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அன்வர் ஹலீம் தலைமை வகித்தார்.


மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் அகமது நுசைரத் முன்னிலை வகித்தார். முன்னதாக இந்தியா மற்றும் ஜோர்டான் நாட்டின் தேசிய கீதங்கள் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் மற்றும் பல்கலைக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மரம் நடுவதன் மூலம் வருங்காலத்தில் அந்த மரங்கள் பல நன்மைகளை கொடுக்கும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பழமையான மரங்கள் பல நடப்பட்டுள்ளன. 


இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது வகையில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடக்க நிகழ்ச்சியில் பல இந்தியர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்திய மற்றும் ஜோர்டான் நாட்டின் பல்வேறு தரப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

Similar News