துபாய் அரசு இயற்றிய புதிய சட்ட மசோதா, NRIகளுக்கு மகிழ்ச்சியை தருமா?

Update: 2021-04-18 12:44 GMT

இந்தியாவிலிருந்து சென்று பல தமிழர்கள் வெளிநாடுகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார்கள். அதிலும் துபாயில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இவர்கள் அங்கு வாடகைக்கு வீடு எடுக்கும் பொழுது அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது துபாய் அரசாங்கம் புதிய சட்ட மசோதாவை இயற்றி, ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது.


 மூன்று ஆண்டு காலத்துக்கு வீட்டு வாடகையை உயர்த்த தடை விதிக்கும் சட்ட மசோதாவை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு வாடகையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், வீட்டு உரிமையாளர்கள் மட்டும் வாடகைக்கு இருப்போருக்கு இடையே பிரச்சினைகள் தவிர்க்கப்படும் எனவும் துபாய் நிலத் துறை தெரிவித்துள்ளது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால் துபாய் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் சீர்நிலை ஏற்படும். மேலும், சொத்துகளின் மதிப்பு குறித்து தெளிவான தரவுகள் கிடைக்கும் என துபாய் நிலத் துறை தெரிவித்துள்ளது.


இச்சட்டம் கையெழுத்தான பிறகு உரிய வழிகாட்டல்களை துபாய் அரசு வெளியிடும். சட்டம் எப்போது கையெழுத்தாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. புதிய சட்டம் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு நியாயமான மார்க்கெட் மதிப்பு கிடைக்கும் என்று துபாய் நிலத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் ஒழுங்கு ஏஜென்சி மூலம் சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் இரு தரப்பினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Similar News