மாசுபாட்டை குறைப்பதில் மத்திய அமைச்சரை கவர்ந்த NRI குடும்பம் !
டெல்லியில் அதிகப்படியான மாசுபாட்டை குறைப்பதில் மத்திய அமைச்சரை ஒரு NRI குடும்பம் கவர்ந்துள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தற்பொழுது டெல்லியில் மாசு குறைபாட்டை குறைக்க பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், டெல்லியில் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க ஒரு NRI குடும்பம் தான் என்னை ஊக்கப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நம் நாட்டில் என்னென்ன சீர்திருத்தங்களை கொண்டு வந்தால் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பது போன்று ஆராய்வார்கள். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளுடன், இந்தியாவை ஒப்பிட்டுப் பார்த்து வெளிநாடுகளில் இருக்கும் மாற்றங்கள் எவ்வாறு இந்தியாவில் கையாள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் உட்பட இதில் அடங்கும்.
அந்த வகையில் இந்தியாவில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிக அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் அது இந்தியாவின் தலைநகரம். மேலும் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் அதுவும் ஒன்று. எனவே அங்கு இருக்கும் வாகனங்கள் இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. எனவே பெட்ரோல் டீசலை சார்ந்திருக்கும் வாகனங்கள் மூலம் டெல்லியில் ஏற்படும் மாசுபாட்டின் விளைவு மூன்று, நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே அந்த வகையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தற்போது செய்தியாளர்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.
அது என்னவென்றால், திறமையான சாலைகளை உருவாக்குவதன் மூலமும், பெட்ரோல்,டீசலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும் டெல்லியின் மாசுபாட்டைக் குறைப்பதற்கான தனது திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்து கொண்டார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள், லண்டன் சென்ற போது ஒரு NRI குடும்பம் தன்னுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் மூலம் மாசுபாட்டைக் குறைப்பதில் எவ்வாறு அது ஊக்குவித்தது? என்பதை வெளிப்படுத்தினார். மேலும் அவர் டெல்லி அரசுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுவதாக மத்திய அமைச்சர் பகிர்ந்து கொண்டார். டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்ல 12 மணிநேரம் மட்டுமே ஆகும் என்றும் அதற்காக தற்போது ஒரு புதிய நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
Input & Image courtesy:Hindustantimes