ஒரு NRI கூட இந்தியாவின் பிரதமராக முடியும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரு NRI கூட இந்தியாவின் பிரதமராக முடியும் என்று அகமதாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Update: 2021-10-05 13:07 GMT

உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அதில் பல வழக்குகள் அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத விஷயங்களாக இருக்கின்றன அல்லது அதற்கு எதிராக இருக்கின்றன. அந்த வகையில் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950இன் கீழ் மூன்று விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து ஒரு மனுவில் பதிலளிக்க கோரியது.  இந்த வழக்கை நீதிபதிகள் தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 


குறிப்பாக இந்த வழக்கை NGO லோக் பிரஹாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டத்தின் விதிகள் கீழ் ஒரு இந்திய NRI குடிமகன் கூட பிரதமராகவோ அல்லது முதலமைச்சராகவோ இருக்க முடியுமா? என்று அதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பாக ஒரு NRI களுக்கும் பல்வேறு வாய்ப்புகளையும் வழங்குகிறது. அவர்கள் பொது தேர்தலின் போது வாக்களிக்க முடியும் என்பது போன்றுதான். சட்டப்பிரிவு பிரிவு 2(1)(E) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 20-A, "நிரந்தரமாக குடியேறாத இந்திய குடிமகன்(NRI) கூட MP/MLA ஆகவும், PM/CM ஆகவும் கூட உதவுகிறது" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


பிரிவு 20-A நாட்டிற்கு வெளியே வசிக்கும் இந்திய குடிமக்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் யூனியன் அரசு தங்கள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதன் காரணமாக இந்த வழக்கு வருகின்ற அக்டோபர் 18 ஆம் தேதி அன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. 

Input & Image courtesy:Barandbench



Tags:    

Similar News