ஷார்ஜாவில் நடைபெற்ற சைக்கிள் போட்டி: கலந்துகொண்ட NRI மக்கள் !
ஷார்ஜாவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆதிகாலத்தில் வாழ்ந்த மூத்த குடிமக்கள் உணவுக்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நாடோடியாக நடை பயணம் மேற்கொண்டார்கள் என சொல்வதுண்டு. மனித நாகரிகம் மெல்ல வளர்ந்த பிறகு அந்த நடைப்பயணம் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளுக்காகவும் மாறியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் மக்கள் ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளுக்கு எதிராக பயணிக்கின்றனர்.
கொரோனா முதல் அலைக்கு பிறகு இந்தியாவில் சைக்கிளில் பயணம் செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்களுக்கு தான் இப்போது அதிக டிமெண்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் நண்பர்களுடன் ஓய்வு நேரங்களில் பொழுதை ஆரோக்கியத்திற்காக செலவிட வேண்டுமென ஏற்பட்டுள்ள மனமாற்றம். அதனால் இப்போது மீண்டும் இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்க தொடங்கியுள்ளது சைக்கிள்.
அந்த வகையில் தற்பொழுது சைக்கிள் போட்டி மீதான ஆர்வமும் கூடியுள்ளது என்று சொல்லலாம். அமீரகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், ஷார்ஜாவில் நீரிழிவு நோயாளிகள் நண்பர்கள் சங்கத்தின் சார்பில் சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Input & Image courtesy:Dinamalar