இந்தியாவிற்கு வருகை தரும் NRIகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறை!

Update: 2021-03-20 11:29 GMT

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நோய் தொற்றின் காரணமாக இந்தியாவிற்கு திரும்பும்பொழுது விமான நிலையங்களில் அவர்கள் கட்டாயம் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு கண்டிப்பான முறையில் தெரிவித்துள்ளது. ஏனென்றால் குறிப்பாக வெளிநாடுகளில் ஒரு தொற்று அதிகம் இருக்கும் காரணத்தினால் அவர்கள் மூலம் எங்கும் உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக, விமான பயணிகளுக்கு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விமானங்களில் பயணிப்போருக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை DGCA வெளியிட்டுள்ளது. இதில், பயணிகள் சரியாக மாஸ்க் அணியாவிட்டால் விமானத்தில் இருந்து வெளியேற்றும்படி DGCA அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டுமென DGCA வலியுறுத்தியுள்ளது. கொரோனா நெறிமுறைகளை மீறும் பயணிகளை அடங்காத பயணிகளாக நடத்தும்படி விமான நிறுவனங்களிடம் DGCA கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், விமான பயணிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை DGCA வெளியிட்டுள்ளது.


பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் DGCA அறிவுறுத்தியுள்ளதுஅறிவுறுத்தியுள்ளது. சில பயணிகள் விமான நிலையத்துக்கு வரும்போது மாஸ்க் அணிந்துகொண்டு, விமானத்தில் ஏறியபிறகு மாஸ்கை கழற்றிவிடுவதாக DGCA வுக்கு புகார்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து, விமானத்தில் மாஸ்க் அணியாதவர்களை வெளியேற்றும்படி DGCA அறிவுறுத்தியுள்ளது.

Similar News