பல்வேறு வெளிநாடு வாழ் இந்தியர்களும் மற்றும் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் பஹ்ரைன்னில் வேலை செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களை வெளியேற்றியுள்ளதாக பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் தற்போது பஹ்ரைன்னில் வசிக்கும் NRIகளுக்கு இடையில் ஒரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாடான பஹ்ரைனில் தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதுபோக, மற்ற வெளிநாட்டினரும் வேலை செய்து வருகின்றனர். ஏற்கெனவே, பஹ்ரைனி மக்களுக்கு மட்டும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது பஹ்ரைன் அரசு.
இந்நிலையில், கல்வித் துறையில் தேவைகள், காலிப்பணியிடங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பஹ்ரைனிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஒதுக்க அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளை சேர்ந்த 1,142க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாக பஹ்ரைன் கல்வித் துறை அமைச்சர் மஜெத் அல் நுவைமி தெரிவித்துள்ளார்.
மேலும், 2016 முதல் 2020 இறுதி வரை 3,656 பஹ்ரைனிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் முழுமையாக பஹ்ரைனிகளுக்கு மட்டும் வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, பஹ்ரைன் கல்வி அமைச்சகத்தில் 3,687 வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.