சவுதி அரேபியாவில் புதிய சீர்திருத்தம்: NRIகளை பாதிக்குமா?

Update: 2021-03-28 11:36 GMT

சவுதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு புதிய சீர்திருத்தங்கள் இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இப்படி வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை செய்வோருக்கான சீர்திருத்தங்களை சவுதி அரேபியா அரசு மேற்கொண்டுள்ளது.


இப்புதிய சீர்திருத்தங்கள் மார்ச் 14 முதல் அமலுக்கு வந்துள்ளன என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் டவுட் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்களுக்கும், மேலும் பிற நாட்டில் சேர்ந்தவர்களுக்கும் இந்த ஒரு புதிய சீர்திருத்தம் சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக நடக்குமா? என்று பார்த்தால், நிச்சயமாக இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சாதகம் தான்.

இதனால் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் ஒரு கோடிக்கும் மேலானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. புதிய சீர்த்திருத்தங்களின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் அல்லது முதலாளியின் அனுமதி இல்லாமலேயே வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம்.


மேலும், நிறுவனம் அல்லது முதலாளியின் அனுமதி இல்லாமலேயே சவுதி அரேபியாவை விட்டு வெளியேறலாம். கபாலா முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களினால் சவுதி அரேபிய வேலைவாய்ப்பு சந்தை பலதரப்பினரையும் ஈர்க்கும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. தொழிலாளர்களின் சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் அமலாகியுள்ளன.

Similar News