இந்திய பயணிகளின் விமானங்களுக்கு தொடர்ந்து தடை: UAE அறிவிப்பு!

Update: 2021-06-01 12:27 GMT

உலகின் பல நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை காப்பதற்காக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணத்தை அனுமதிக்க தடை வைத்துள்ளனர். மேலும் தங்கள் நாட்டு மக்களையும் வெவ்வேறு நாடுகளுக்கு போவதற்கும் அவர்கள் அறிவுரை கூறி உள்ளனர். அதன்காரணமாக தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவது என்னவென்றால், நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஏப்ரல் 24ம் தேதி முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது.


இந்தியாவில் தற்போது வேகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கோவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Similar News