கனடா பொதுத் தேர்தல்: 17 இந்திய வம்சாவளி மக்கள் வெற்றி!

17 இந்திய வம்சாவளிகள் கனடா பொதுத் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்கள்.

Update: 2021-09-23 12:25 GMT

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் பல்வேறு உயர்ந்த பதவிகளில் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் அங்கு தான் இருக்கும் இடங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த பகுதியில் தற்பொழுது கனடாவின் பிரதமராக 2015 ஆண்டு முதல் ஜஸ்டின் ட்ரூட்டோ உள்ளார். இவர் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ளன. எனவே அதற்கு முன்பாக அங்கு தற்பொழுது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளிகள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


இந்த பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங், 40 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சியின்போது இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஹர்ஜித் சாஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சக்கர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளன. காமன்ஸ் சபையில் பெரும்பான்மை பெற இன்னும் 14 இடங்கள் தேவை. எனினும் தற்போதைய கூட்டணியே தொடரும் என்பதால் லிபரல் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.


எனவே அதிகமான இந்திய வம்சாவளிகள் வெற்றிபெற்ற தேர்தலாக இந்த தேர்தல் மாறியுள்ளது. ஏற்கனவே கனடா பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூட்டோ மீண்டும் வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா கனடா இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பல தரப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என்பது போன்ற வார்த்தைகளை அவர் கூறியுள்ளார். 

Input & Image courtesy: Economic times

Tags:    

Similar News