பண்டிகை என்றால் உள்ளுக்குள்ளே ஒருவிதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிநாட்டில் நம்மூர் பண்டிகை கொண்டாட்டம் என்று சும்மாவா சொல்ல வேண்டும். அந்த வகையில் ஷார்ஜா பாரம்பரிய திருவிழா 18 வது ஆண்டாக ஷார்ஜா மற்றும் கோர்பக்கான் பகுதியில் நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். மேலும் பாரம்பரிய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா வரும் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த திருவிழாவை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த நோய் தொற்று காலத்திற்கு மத்தியில் இங்கு விழா நடைபெற்றது. மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் எடுத்த பின்னர் தான் இந்த பண்டிகை கொண்டாட அனுமதிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.