50 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழகத்திற்கு அனுப்பிய அபுதாபி வாழ் தமிழர்.!

Update: 2021-06-05 13:19 GMT

உலக அளவில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் தமிழ் நாட்டிற்குத் தன்னால் முடிந்த உதவிகளை ஏதேனும் ஒரு வகையில் தான் செய்து கொண்டு வருகிறார்கள். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் எண்ணமும் தாயகத்தை நோக்கி தான் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தற்போது கொரானா சூழலில் தமிழகத்திற்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 330 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உயிர்களைக் காப்பாற்றும் உயரிய பபணியை துபாயில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமீரக தொழிலதிபர் நோபல் மெரைன் சாகுல் ஹமீது என்ற தொழிலதிபர் மேற்கொண்டார்.


கொரோனா 2வது அலையில் தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மிகக் கடுமையான சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமான நிலையில், பற்றாக்குறையைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு பலவித முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வந்து உள்ளது. மேலும் இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கொள்ளும் தற்பொழுது நடைமுறையில் உள்ளன.


இதே சமயத்தில் தான், அமீரகத்தில் இயங்கும் நோபல் மரைன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநரும், தொழிலதிபரும் மனிதநேயருமான சாகுல் ஹமீது தமிழ்நாட்டு மக்களின் துயர் துடைப்பதற்காக இந்திய ரூ.50 லட்சம் மதிப்பு கொண்ட 330 ஆக்சிஜன் சிலிண்டர் அமீரகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாக அனுப்பி வைத்தார். இதனால் பல உயிர்கள் காக்கப்பட்டுவதுடன், ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் அது பேருதவியாக அமைந்தது. இப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் உதவிகள் தான் கொரோனாவின் இரண்டாவது அலைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் அரசு கருத்தாக உள்ளது. 

Similar News