அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி: யார் இவர்?
அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது பல்வேறு இந்திய வம்சாவளிகள் முக்கிய பதவிகளில் தவித்து வருகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்க அதிபருடன் அவர்கள் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை தேர்வு செய்துள்ளார். மேலும் இந்திய வம்சாவளியான ஆர்த்தி பிரபாகரன் என்பவர் நியமிக்கப் பட்டதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளிகள் இத்தகைய முக்கிய பதவிகளில் அமர்த்தவும் இதுவே முதல் முறையாகும்.
மேலும் இந்திய வம்சாவளியான ஆர்த்தி பிரபாகரன் என்பவர் தற்போது அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக ஒரு பெண்ணாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும் இத்தகைய பதவிகளில் இதுவரை அமெரிக்க நாட்டை சேர்ந்த வெள்ளை இனத்தவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த சூழ்நிலையில் தற்போது இந்திய வம்சாவளி இந்த ஒரு பொறுப்பை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
யார்? இந்த ஆர்த்தி பிரபாகரன் என்பதை தற்போது பார்க்கலாம். இதற்கு முன்பு இந்த பதவியில் இருந்த எரிக் என்பவர் தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை துன்புறுத்திய காரணத்திற்காக அவர் தற்போது அந்த பதவியில் இருந்து வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக தற்போது புதியதாக ஆர்த்தி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்தவர் தான் ஆர்த்தி பிரபாகர். பின்னர், இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடியேறிய நிலையில், கர்லிபோனியா பல்கலைக்கழகத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் 7 ஆண்டு கால அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் பணி புரிந்துள்ளார் இவர் பயோ-டக்னாலஜி, ஆற்றல் சக்தி, பொது சுகாதாரம் போன்ற பல்வேறு தளங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
Input & Image courtesy: News 18